புதன், 3 ஆகஸ்ட், 2011

AADI 18 PERUKKU

தோப்புத்துறை ஆடி 18 ம் பெருக்கு விழா

இன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு வாழும் கலை குடும்பம் மற்றும் சேவைகரங்கள் நடத்தியது:

தமிழ் மகளிர் கொண்டாடும் பதினெட்டாம் பெருக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இன்று காலை எட்டரை மணிக்கு மேல் தோப்புத்துறை அருள்மிகு கைலாசநாதர் ஆலயத்தில்  கோவில் குருக்கள் ஸ்ரீ வேத. தண்டபாணிசிவா அவர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களால் பூஜித்து காவேரி தாயை கடம் எனும் கும்பத்தில் ஆவாகனம் செய்து சுமங்கலி பூஜை, அஷ்ட்ட லக்ஷ்மி பூஜை செய்து வந்திருந்த தோப்புத்துறை மகளிர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து கோவில் குளத்தில் ஆவாகனம் செய்த காவிரியை கொண்டு புனிதப்படுத்திய பிறகு அனைத்து மகளிர்களும் காவேரி தாயை வணங்கி வழிபட்டார்கள். வந்த அனைவர்களுக்கும் குளிர் பானம் வழங்கி மகிழ்ந்தார்கள். இவ்விழாவை  சங்க ஒருங்கிணைப்பாளர்
திருவாளர்கள் . வை.சுப்பிரமணியன் , கே.பாலகிருஷ்ணன்(LIC), பா.செல்வராஜ், வெ.வைத்தியநாதன், பழனி மேஸ்திரி, எஸ்.நாகராஜன்  ஆகியோர் செய்திருந்தார்கள்.