புதன், 14 மார்ச், 2012

PONGAL FESTIVAL 6TH ANNVARASARY KOLAPPOTTI

தைப் பொங்கல் திருவிழா
மற்றும்
மாபெரும் கோலப்போட்டி 
 நாள் : 17.01.2012 & 18.01.2012
நிகழ்விடம்
அரசு உயர்நிலைப் பள்ளி, தோப்புத்துறை

புதன், 3 ஆகஸ்ட், 2011

AADI 18 PERUKKU

தோப்புத்துறை ஆடி 18 ம் பெருக்கு விழா

இன்று ஆடி பதினெட்டாம் பெருக்கு வாழும் கலை குடும்பம் மற்றும் சேவைகரங்கள் நடத்தியது:

தமிழ் மகளிர் கொண்டாடும் பதினெட்டாம் பெருக்கு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இன்று காலை எட்டரை மணிக்கு மேல் தோப்புத்துறை அருள்மிகு கைலாசநாதர் ஆலயத்தில்  கோவில் குருக்கள் ஸ்ரீ வேத. தண்டபாணிசிவா அவர்கள் மற்றும் சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்களால் பூஜித்து காவேரி தாயை கடம் எனும் கும்பத்தில் ஆவாகனம் செய்து சுமங்கலி பூஜை, அஷ்ட்ட லக்ஷ்மி பூஜை செய்து வந்திருந்த தோப்புத்துறை மகளிர்கள் கலந்து கொண்டு சிறப்பித்து கோவில் குளத்தில் ஆவாகனம் செய்த காவிரியை கொண்டு புனிதப்படுத்திய பிறகு அனைத்து மகளிர்களும் காவேரி தாயை வணங்கி வழிபட்டார்கள். வந்த அனைவர்களுக்கும் குளிர் பானம் வழங்கி மகிழ்ந்தார்கள். இவ்விழாவை  சங்க ஒருங்கிணைப்பாளர்
திருவாளர்கள் . வை.சுப்பிரமணியன் , கே.பாலகிருஷ்ணன்(LIC), பா.செல்வராஜ், வெ.வைத்தியநாதன், பழனி மேஸ்திரி, எஸ்.நாகராஜன்  ஆகியோர் செய்திருந்தார்கள். 

சனி, 30 ஜூலை, 2011

Sri Throwpathaiyamman Kovil Agni Vasanthorsawam

அருள்மிகு திரௌபதையம்மன் கோவில்,
                                         தோப்புத்துறை

கொடியேற்றம் (த்வஜரோஹனம்) நிகழ்ச்சி.

தோப்புத்துறை அருள்மிகு திரௌபதையம்மன் கோவில் வருடாந்திர தீமிதி திருவிழா இவ்வருடம் 21-07-2011 அன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. எதிர்வரும் 08 -08 - 2011 திங்கட்கிழமை காலை ஒன்பது மணிக்கு திரௌபதை படுகளம் மற்றும் கூந்தல் முடிக்கும் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. பகல் 11 மணிக்கு வேண்டுதல் அன்னதான குழு ஏற்பாடு செய்துள்ள பகல் முழு உணவு வரும் பக்தர்களுக்கு பரிமாறபடுகிறது. மாலை ஆறு மணிக்கு அம்மன் புறப்பாடாகி கிழக்கு ஆற்றான் கரைக்கு எழுந்தருளி, பக்தர்கள் தீமிதிக்கும் வைபவம் வெகுசிறப்பாக நடைபெறும். இரவு ஒன்பது மணிக்கு "முல்லை நடவரசு " அவர்கள் தலைமையில் பட்டிமன்றமும் நடை பெற உள்ளது. இதை காணும் வெளியூரில் வசிக்கும் நமதூர்  பெருமக்கள் அனைவரும் குடும்பத்துடன்  வந்து விழாவினை சிறப்பித்து அம்மனின் அருள் பெற அன்போடு அழைத்து மகிழ்கிறோம். நன்றி வருக! அம்மனின் அருள் பெருக!!

சனி, 12 பிப்ரவரி, 2011

thopputhurai sevaikarangal


 உ

  சேவைக் கரங்கள்  
(தோப்புத்துறை வாழும்கலை குடும்பம் )


           தோப்புத்துறை சேவை கரங்கள் என்ற மன்றம் பொது நல நோக்கில் அமைக்க பட்டது . இந்த அமைப்பானது தோப்புத்துறையில் வாழும்கலை பயிற்சி பெற்ற சிலரால் நடத்தப் படுவதாகும். இம்மன்றத்தில் உள்ள உறுப்பினர்கள் ஒருங்கிணைந்து இந்தஊருக்கு  நற்பணிகளை செய்து வருகின்றோம். அவற்றில் முக்கியமானது ஒவ்வொரு வருடமும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்காக "பொங்கல் விழா" நடத்தி வருகிறோம். இந்த வருடமும் எப்போதும் போல் 16-01 -2011  அன்று மகளிருக்கான பிரமாண்ட கோல போட்டி நடத்த பட்டது. மகளிருக்கான இசை நாற்காலி, மகளிருக்கான பாட்டு போட்டி,  கும்மி பாடல்கள், குழந்தைகளுக்காக ஓவியப்போட்டி, பேச்சுப்  போட்டி,  கட்டுரைப் போட்டி,  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி, சிறுவர்களுக்கான 100 மீட்டர் ஓட்ட பந்தயம், பலூன் உடைத்தல் மற்றும் பல போட்டிகள் நடத்த பட்டன. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக  குழந்தைகளின் நடன நிகழ்ச்சியும் இறுதியாக பாரத கதா விற்பன்னரும் நாட்டுப்புற இசைவாணருமான திரு. மதிவாணன் அவர்களின் நாட்டுபுற தெம்மாங்கு பாடல்களுடன் விழா இனிதே நிறைவேறியது.  இவ் விழாக்களை எங்களின் ஒருங்கினைப்பாளர் திரு.அரங்க.சின்னதுரை(ஓய்வு பெற்ற அரசு மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர்)  மற்றும் S . வைத்யநாதன்( தலைமை ஆசிரியர் ஸ்ரீ தாயுமாணவர் வித்யாலயம், வேதாரணியம்) சிறப்பாக நடத்தி கொடுத்தனர்.
மேலும் செய்த நற்பணிகள் மற்றும் இவ்வூரை பற்றி தகவல்கள் அடுத்த இடுகையில்.
நன்றி
 By

K.பாலகிருஷ்ணன்(LIC)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------
உறுப்பினர்கள் : வை. சுப்பிரமணியன், K.பாலகிருஷ்ணன்(LIC), V.வைத்தியநாதன், P.செல்வராஜூ, M.V.வெங்கடேஷ், A.S.சேதுபதி,S.நாகராஜன்,V. பழனி மேஸ்திரி, V.முருகராசு,
Dr. B.மணிகண்டன் , M.ராஜன், K.R. அருண்,  V.மூர்த்தி பத்தர், K. பழனிபத்தர், K.செல்வராஜ் ஐயர், K.பரமசிவம், M.K.வெற்றிவேல்,S.அன்பழகன்  மற்றும் மின்சார நண்பர்கள்.

Message Body

http://www.equitycarolinas.com/images/sendinvitetoyourfriend2.htm